Tuesday, November 23, 2010

Home » » கல்வி கற்க போகும் கழுதை...!!(Photos Updated)

கல்வி கற்க போகும் கழுதை...!!(Photos Updated)

மொனா ரமோனி பார்வையற்றவர். பிரய்லி உபகரணத்தின் உதவியோடு மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் மனோவியல் சிகிச்சை மற்றும் ஆலோசனை தொடர்பான கற்கை நெறியை மேற்கொண்டு வருகின்றார்.

இவரின் வழிகாட்டித் துணை ஒரு கழுதை. அதன் பெயர் கலி. இதில் என்ன விஷேடம் என்றால் கலி இந்த மாணவிக்கு துணை மட்டுமல்ல உற்ற நண்பனும் கூட.

வகுப்புக்களுக்குச் செல்லும் போது கலியும் கூடவே உள்ளே சென்றுவிடுகின்றது. பாடம் நடத்தும் பேராசிரியர்களுக்கும் இதனோடு நல்ல நட்பு. அவர்கள் எதுவும் சொல்வதில்லை. பாடம் நடத்திவிட்டு பேராசிரியர் ஷெலிஸ்மித்ஸன்  ‘என்ன கலி புரிந்ததா?” என்று சிரித்துக்கொண்டே கழுதையைப்பார்த்தும் கேட்பார்.
அமெரிக்காவில் இந்த வகையைச் சார்ந்த மட்டக்குதிரைகள் பார்வையற்றவர்களின் வழிகாட்டி மிருகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் கல்லூரி செல்லும் முதலாவது கழுதை இதுதான். இந்தப் பல்கலைக்கழகத்தில் பார்வைக் கோளாறு உட்பட ஏனைய அங்கவீனமுற்றவர்களுக்காகவும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரு விஷேட பிரிவு உள்ளது.

இத்தகைய மாணவர்களை இனம் கண்டு அவர்களின் முழுத்திறமையையும் ஊக்குவித்து அவர்களை சமூகத்துடன் இரண்டறக்கலக்கச் செய்வதற்கான விஷேட வேலைத்திட்டங்கள் இங்கு அமுல் செய்யப்பட்டு வருகின்றன.

கலி என்ற இந்தக் கழுதை வகுப்பறைகளுக்குள் பிரவேசிக்கும் போது அது என்ன செய்யுமோ? வகுப்பறைகளைக் குழப்புமோ என்றெல்லாம் ஆசிரியர்களுக்கும் ஏனையவர்களுக்கும் ஆரம்பத்தில் அச்சம் இருந்தது.

ஆனால் கலி இதுவரை அப்படியொன்றும் செய்யவில்லை. மிகவும் நல்லபிள்ளையாக நடந்து கொள்கின்றது.

அதுமட்டுமல்ல கலிக்கு ஒரு புதிய நட்பும் கிடைத்துள்ளது. அதுதான் கண்பார்வையற்ற இன்னொரு மாணவியின் வழிகாட்டியான நாய். இவையிரண்டும் இப்போது நல்ல நண்பர்களாம்.
Share this article :