முஸ்லிம் நாட்டில் கணவன்மார்களை சந்தேகிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தி பெனின்சுலா பத்திரிகை தெரிவித்துள்ளது.கணவர்களை சந்தேகப்படுவது என்ற கருத்தில் உலக நாடுகள் அனைத்திலும் உள்ள
பெணகள் ஒற்றுமையாக இருப்பார்கள் போலும். கத்தார் நாட்டை சேர்ந்த பெண்கள் தங்கள் கணவர்கள் பயன்படுத்தும் பேனா, சிகரெட் லைட்டர்கள், மற்றும் பரிசுபொருட்கள் போன்றவற்றில் சிறிய வகை கேமராக்களை பொருத்திவைத்து உளவு வேலை பார்க்கின்றனர். அதுமட்டுமில்லாமல் கணவரின் நடவடிக்கைகளை வேவு பார்ப்பதற்காக குறிப்பிட்ட பெண்களையோ அல்லது தனக்கு உண்மையாக விளங்கும் நண்பிகளேயே இத்தகைய வேலைக்கு பயன்படுத்துவாதகவும், இப்படி செய்வதன் மூலம் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதை போன்று உணரமுடிகிறதாக பெண்கள் கூறுவதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
