முகத்தில் மசாஜ் செய்தால், மன அழுத்தம், ஞாபகமறதி, உறக்கமின்மை உள்ளிட்ட பிரச்னைகள் தீரும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. உடலில் ஏற்படும் வலி உள்ளிட்ட பிரச்னைகளை தீர்ப்பதற்கு, உடலில் மசாஜ் செய்து கொள்கின்றனர். அதேபோன்று, முகத்தில், மசாஜ் செய்தால், மன அழுத்தம், ஞாபகமறதி, உறக்கமின்மை போன்ற பிரச்னைகளை தீர்த்து கொள்ளலாம் என்று பிரிட்டன் மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த முறைக்கு "பேஷியல் ரெப்பிளக்சாலஜி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
மசாஜ், சீனாவின் அக்குபஞ்சர் மருத்துவமுறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். மசாஜ் செய்வதன் மூலம், உடலின் முக்கிய மையங்கள் தூண்டப்பட்டு, ரத்த சுழற்சி சீராகிறது. அதேபோன்று முகத்தில் மசாஜ் செய்வதன் மூலம் உடலில் ரத்தம் ஓட்டம் சீராகி, பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுகிறது.
முகத்தில், எண்ணற்ற ரத்த நாளங்கள் உள்ளன. உடலில் உள்ள முக்கிய பகுதிகளை கட்டுப்படுத்தக்கூடிய ரத்த நாளங்களும் இதில் அடக்கம். எனவே, முகத்தில் சீராக மசாஜ் செய்யும் போது, அந்த ரத்த நாளங்கள் தூண்டப்பட்டு, ரத்த ஓட்டம் சீராகிறது. இதனால், மன அழுத்தம் போன்ற பிரச்னைகள், ஞாபகமறதி, உறக்கமின்மை உள்ளிட்ட பிரச்னைகள் தீர்க்கப்படுகின்றன. தற்போது, பிரிட்டனில் தற்போது, 35 பேர் "பேஷியல் ரெப்பிளக்சாலஜி' பயிற்சி பெற்று வருகின்றனர்.

