Tuesday, November 23, 2010

Home » » தேவை இல்லாமல் புலம்புவதில் இங்கிலாந்து நாட்டவர்கள் முன்னிலையில்!!

தேவை இல்லாமல் புலம்புவதில் இங்கிலாந்து நாட்டவர்கள் முன்னிலையில்!!

தேவை  இல்லாமல் புலம்புவதில் தேவையில்லாத விசயங்களை மனதில் போட்டு குழம்பிக்கொள்வதில் இங்கிலாந்து நாட்டவர்கள் முன்னிலையில் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக இங்கிலாந்து மக்கள் வருடத்திற்கு 53 மணிநேரம் புலம்புவதில் செலவிடுகின்றனர். குறைந்த வயதுடையவர்கள் தினமும் நான்குமுறை புலம்புவதாக டெய்லி எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. டி.வி.,நிகழ்ச்சிகள் மற்றும் விலை வாசி குறித்து 65 சதவீதம் பேர் வாரத்திற்கு ஒரு நாளாவது புலம்புகின்றனர்.பருவநிலை மாற்றம் குறித்து 64 , அரசின் நிலவரம் குறித்து 50 சதவீதம் பேர் புலம்புகின்றனர். வீட்டு வேலை செய்வதில் 58 சதவீதம் பேர் புலம்புகின்றனர். பண பற்றாக்குறையை காரணம் கூறி 52 சதவீதம் பேர் புலம்புகின்றனர். சிறு விசயங்களை கூட பெரிதாக நினைத்து வருத்தப்படுவது இங்கிலாந்து மக்களுக்கு பழக்கமாக உள்ளது என பர்னெட் என்பவர் தெரிவித்துள்ளார்
Share this article :