Tuesday, November 23, 2010

Home » » பாம்பை மூக்கில் நுழைத்து சாகசம்

பாம்பை மூக்கில் நுழைத்து சாகசம்

சீனாவைச் சேர்ந்த ஒருவர் வேடிக்கையான பல சாகசங்களைப் புரிந்ததால் 'மிகுந்த பல்கலைத் திறமையுள்ள கலைஞர்' என்று தனது பெயர் உலகசாதனை புத்தகத்தில் பதியப்படும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார்.
 
தென்மேற்கு சீனாவின் குயிஸோ மாகாணத்தை சேர்ந்த யாங் குவாங் என்பவர் தன்னால் 30 விசித்திரமான சாகசங்களை நிகழ்த்த முடியும் எனத் தெரிவித்துள்ளார். அதை நிரூபிப்பதற்காக, அவர் ஹீனான் மாகாணத்திலுள்ள தலை நகரில் அனைத்து சாகசங்களையும் ஒரே நிகழ்ச்சியில் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
 
எரியும் மின்குமிழ்கள் மீதேறி நிற்றல், கண் இமைகளில் கட்டி தண்ணீர் வாளியை தூக்குதல் ,தனது நாசியினுள் இலத்திரனியல் துளைக்கருவியை செலுத்துதல், கூர்மையான கத்தியின் முனை மீது நிற்றல், காரை தனது கண் இமையால் இழுத்தல் போன்ற சாகசங்களை அவர் புரிந்தார்.
 
அத்துடன், அவர் உயிருடன் உள்ள பாம்புக் குட்டியோன்றை தனது நாசித் துவாரத்தால் உள்ளே அனுப்பி தனது வாயிலிருந்து அந்தப் பாம்புக் குட்டியை இழுத்து, பார்வையாளர்களை அதிர்ச்சியடையச் செய்தார்.
 
அவரை போலவே வேறு சிலரும் இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காக அவரின் காதலி வெங் மெய் (வயது 22 ) தனது கழுத்தில் அழுத்திப் பொருத்தப்பட்ட கத்தியோன்றின் மூலம் காரொன்றை இழுத்தமை குறிப்பிடத்தக்கது
Share this article :