Tuesday, November 23, 2010

Home » » ட்விட்டர் பயன்படுத்திய பெண்ணுக்கு சிறை தண்டனை

ட்விட்டர் பயன்படுத்திய பெண்ணுக்கு சிறை தண்டனை


உலகத்திலயே முதன் முறையாக ட்விட்டர் பயன்படுத்தியமைக்காக சீனாவில் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை கிடைத்துள்ளது.  தி இண்டிபெண்டன்ட் இதழின் கூற்றுப்படி செங் ஃசியன்ய்பிங் என்னும் பெண்மணிக்கு தனது கணவரின் ட்விட்டை மறுபிரசுரம் செய்ததால் ஓராண்டு கடூழிய சிறைத் தண்டனையை சீன அரசு விடுத்துள்ளது.
ட்விட்டரின் தலைமை நிர்வாகி டிக் கோச்டோலோ வெளியிட்ட பதிவில் அவர் கூறுவதாவது, ” அன்பார்ந்த சீன அரசே ட்விட்டில் நையாண்டியாக விடுத்த ஒரு கூவலுக்காக ஒரு பெண்ணுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை கொடுத்திருப்பது முன்னோக்கி செல்லும் சீன நாட்டுக்கும், சீன மக்களின் எத்ரிகாலத்துக்கும் நல்ல அறிகுறியாகப் படவில்லை,” என்றார்.
Share this article :