Sunday, September 19, 2010

Home » » தந்தையை கடத்தி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம்!!

தந்தையை கடத்தி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம்!!

தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகே மாதவன் நகரைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவருக்கு 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இதில் அவரது 2வது மகள் சுடலி (35)க்கு 10 வருடங்களுக்கு முன்பு நாக்கில் ஏற்பட்ட புண் காரணமாக வாய் பேச முடியவில்லை. இதனால் அவருக்கு திருமணம் நடைபெறவில்லை.

காளிமுத்துவின் நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி (52). இவருக்கு சுடலியின் மீது ஒரு கண். அவரை அடைய எண்ணிய அவர் அதற்கான திட்டம் தீட்டியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம்  காளிமுத்துவை கடத்திச்சென்று அவருக்கு அதிகப்படியான மதுவை ஊற்றிக் கொடுத்துள்ளார்.

பின்னர், நேற்று இரவு, காளிமுத்துவின் வீட்டிற்குச்சென்று அங்கு தனியாக இருந்த சுடலியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலுச்சாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Share this article :