மிகவும் பிரபலமான சமூக வளை தளங்களில் ஒன்று டிவீட்டர். இந்த வலை தளம் விரைவில் செய்தி வலைதளங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. டிவீட்டர் இணையதளம் ஒரு மைக்ரோ பிளாக் இணைய தளம் ஆகும். உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் முதல் சாதாரண தொழிலாளர்கள் வரை தங்களது கருத்துக்களை இந்த வலை தளம் வாயிலாக தெரிவிக்கும் வகையில் சேவையினை செய்து வருகிறது. 175 மில்லியன் உறுப்பினர்கள் பதிவு செய்து வைத்துள்ளது. இந்நிலையில் செய்தி இணையதளம் ஒன்றை தொடங்க டிவீட்டர் முடிவு செய்துள்ளது. இது குறித்து இந்த நிறுவனத்தில் இணை ஸ்தாபகர் பிட்ஸ்ஸ்டோன் தெரிவிக்கையில், டிவீட்டர் இணையதளத்தினை மேலும் பரவலாக்க உலகம் முழுவதும் கிடைக்ககூடிய தகவல்களை திரட்டி செய்தி இணையதளமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முன்னணி செய்தி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தற்போது டிவீட்டர் இணையதளத்தில் 95 மில்லியன் குறுந்தகவல்கள் வருகின்றன. இதனை மேலும் பரலாக்க செய்தி இணையதள வசதியினை ஏற்படுத்தி நெட்வொர்க் அமைக்கப்படவுள்ளது. இதற்காக 100 மில்லியன் டாலர் முதலீடு செய்கிறது. இவ்வாறு பிட்ஸ்ஸ்டோன் கூறினார். டிவீட்டர் இணையதளம் அமெரிக்க பார்லிமென்ட் நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிட தக்கது.
Wednesday, November 24, 2010
4:15 AM
நாய்க்குட்டிக்குப் பெயர் வைக்க நாட்டு மக்களின் உதவியை நாடியுள்ளார் ரஷ்யப் பிரதமர்!
கடந்த வார இறுதியில் பல்கேரியப் பிரதம மந்திரியால் ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புடினுக்கு ஒரு நாய்க்குட்டி பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. ஆண் நாய்க் குட்டியான இதற்கு பொருத்தமான ஒருபெயரைச் சூட்ட உதவுமாறு அவர் நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசாங்கம் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இது சம்பந்தமாக அறிவித்துள்து. பல்கேரியாவும் ரஷ்யாவும் கடந்த வார இறுதியில் குழாய் மூலமான எண்ணெய் விநியோகம் தொடர்பான பல உடன்படிக்கைகளைச் செய்து கொண்டன.
இதன் நினைவாக பல்கேரியப் பிரதமர் பொய்கோ பொரிஸோ நிகழ்வுகளின் முடிவில் கரகாச்சான் ரக நாய்க்குட்டி யொன்றை ரஷ்யப் பிரதமருக்குப் பரிசாக அளித்து அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
இந்த நாய்க்கு ஒரு அழகிய பெயரைச் சூட்டவே அவர் பொது மக்களின் உதவியை நாடியுள்ளார்
4:12 AM
வந்து விட்டது டிஜிட்டல் உயில்
ஒருவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய சொத்து யாருக்கு கிடைக்க வேண்டும் என்பதை உயில் அடையாளம் காட்டுகிறது. டிஜிட்டல் மயமான உலகில் ஈமெயில், பேஸ்புக் உள்ளிட்ட டிஜிட்டல் தகவல்களை யார் சொந்தம் கொண்டாடுவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கும் வந்து விட்டது டிஜிட்டல் உயில்.
ஈமெயில், சமூக இணையதளம், இன்டர்நெட் வழி பாங்கிங் என இன்டர்நெட் பயன்பாடு இன்றைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாததாகி விட்டது. இதில் போட்டோ ஆல்பம், பல்வேறு முக்கிய ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் சேமித்து வைக்கப்படுகின்றன. இவற்றுக்குள் நுழைய பயன்பாட்டாளர் பெயர் மற்றும் ரகசிய குறியீடு அவசியமாகிறது.
இந்நிலையில் ஒருவர் திடீரென இறந்து விட்டால், அவருடைய டிஜிட்டல் தகவல்களுக்கான ரகசிய குறியீடை அறிய வாரிசுதாரர்கள் படாத பாடுபட வேண்டி உள்ளது. குறிப்பாக, இத்தகைய தகவல்களை பெற சம்பந்தப்பட்ட இணையதள நிறுவனங்கள் கெடுபிடி காட்டுகின்றன. எனவே, தங்கள் மறைவுக்குப் பிறகு தனது அசையும், அசையா சொத்துகள் யாருக்கு கிடைக்க வேண்டும் என்பதை உயில் மூலம் எழுதி வைப்பது போல டிஜிட்டல் தகவல் தொடர்பாகவும் உயில் எழுதி வைக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இந்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பவன் துகல் கூறியதாவது: ஒருவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய டிஜிட்டல் தகவலை பெறுவதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் எழுகின்றன. நீதிமன்றத்தில் இதற்கான அதிகார சான்றிதழ் பெறுவது மிகவும் கடினம். எனவே, இன்றைய சூழலில் டிஜிட்டல் உயில் மிகவும் அவசியமாகிறது.
முதலில் டிஜிட்டல் வழியில் என்னென்ன தகவல் உள்ளது என்பதை பட்டியல் இடுங்கள். தனது மறைவுக்கு பிறகு இந்த தகவலை பெறுவதற்கு யார் உரிமை கோரலாம் என்பதை குறிப்பிட்டு கையெழுத்திட வேண்டும். இந்தியர்களிடையே இது குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே முதன் முறையாக கடந்த ஏப்ரலில் மும்பையைச் சேர்ந்த ஒருவர் டிஜிட்டல் உயில் எழுதுவதற்கு உன் உதவியை நாடினார். அதன் பிறகு 6 பேர் அணுகினர். மேலும் பலர் இது தொடர்பாக தொடர்பு கொண்டு வருகின்றனர் இவ்வாறு பவன் துகல் தெரிவித்தார்.
3:42 AM
உலகிலேயே மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட இணையதளம்
செக்ஸ்.காம் என்பது ஒரு இணையதளத்தின் பெயர். இந்த இந்த இணையதளத்தை ஒரு கம்பெனி மிக அதிக விலை கொடுத்து வாங்கியதன் மூலம் அது வரலாறு படைத்து உள்ளது. இந்த இணையதளம் முதலில் எஸ்காம் என்ற நிறுவனத்துக்கு சொந்தமாக இருந்தது. இந்த கம்பெனிக்கு அதிக அளவில் இழப்பு ஏற்பட்டதால் அது இதை விலைக்கு விற்க முன்வந்தது.
குளோவர் ஹோல்டிங்ஸ் லிமிடெட் என்ற கம்பெனி இந்த இணையதளத்தை விலைக்கு வாங்கி உள்ளது. அது தான் 65 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்து இந்த இணையதளத்தை விலைக்கு வாங்கி உள்ளது.
இணையதள வரலாற்றில் இவ்வளவு அதிக தொகைக்கு விற்ற ஒரே இணையதளம் இது தான் என்று கூறப்படுகிறது.
Tuesday, November 23, 2010
5:12 AM
மிகப்பெரிய மனித எலும்புக்கூடு-(Picture Updated)
12 மீற்றர் நீளமான மிகப்பெரிய மனித எலும்புக்கூடொன்று மேற்கு இந்தியாவின் பாலைவனைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்துக்கு சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளதுடன், இந்திய இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது இந்திய புராணக்கதைகளில் குறிப்பிடப்படும் காடுகளில் வாழ்ந்த Rakshasas என்ற அரக்கனுடைய எலும்புக்கூடாக இருக்கலாமென நம்பப்படுகிறது.
5:07 AM
இந்தியாவின் மனித சிலந்திகள்-(Photos Updated)
இந்தியா,கல்கத்தாவின் Shagu Dream Land பாரிதாபாத்தைச்சேர்ந்த 40 வயதுடைய ஒட்டிப்பிறந்த சகோதரிகளான கங்கா ஜமுனா இருவரையும் தான்"இந்தியாவின் மனிதச்சிலந்தி" ( “The Human Indian Spider”)என அழைக்கின்றனர். காரணம், இவர்களால் சாதாரணமாக நடக்க முடியாது. இருப்பினும், கால்களையும் 4 கைகளையும் பயன்படுத்தி மிக வேகமாக ஊர்ந்து செல்ல முடிகிறது. இவர்கள் நகர்வது சிலந்தி போன்ற அமைப்பில் காணப்படுவதால் இவ்வாறுஅழைக்கப்படுகின்றனர்.
4:52 AM
பெண்ணிடம் தகாத முறையில் நடந்தவர் காமெராவில் சிக்கினார்
நியூ யோர்க் சப்வே தொடருந்தில் ஒரு பெண்ணிடம் தனது பிறப்புறுப்பைக் காட்டி தகாத முறையில் சிக்க நபர், வகையாக மாட்டிக்கொண்டார்.
நியூ யோர்க் நகரின் யூனியன் வீதி சப்வே தொடருந்தில் ஒரு நபர் பெண்ணிடம் தனது பிறப்புறுப்பைக் காட்டி தகாத முறையில் நடந்துள்ளார். இதனைக் கண்ட அப்பெண் மிகுந்த கோபம் கொண்டு கத்தியுள்ளது மட்டுமில்லாமல், உடனடியாக காவல் துறையினரிடமும் புகார் செய்துள்ளார்.
அப்பெண்ணின் கூக்குரலால் அக்கம் பக்க்கத்தில் இருந்தவர்கள் அப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட அந்நபரை காமெராவில் படம் எடுத்து யூடுபில் வெளியிட்டும் விட்டனர். அந்தக் காணொளியை நீங்கள் இங்கு காணலாம்.
இதே போல் சென்னை பேருந்துகளில் பெண்களிடம் சில்மிஷம் செய்பவர்களையும் காமெராவில் படம் எடுத்து மானத்தை வாங்க வேண்டும். பெண்களும் சும்மா விடாமல் காவலரிடமும் புகார் கொடுக்க வேண்டும்
4:48 AM
ட்விட்டர் பயன்படுத்திய பெண்ணுக்கு சிறை தண்டனை
உலகத்திலயே முதன் முறையாக ட்விட்டர் பயன்படுத்தியமைக்காக சீனாவில் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை கிடைத்துள்ளது. தி இண்டிபெண்டன்ட் இதழின் கூற்றுப்படி செங் ஃசியன்ய்பிங் என்னும் பெண்மணிக்கு தனது கணவரின் ட்விட்டை மறுபிரசுரம் செய்ததால் ஓராண்டு கடூழிய சிறைத் தண்டனையை சீன அரசு விடுத்துள்ளது.
ட்விட்டரின் தலைமை நிர்வாகி டிக் கோச்டோலோ வெளியிட்ட பதிவில் அவர் கூறுவதாவது, ” அன்பார்ந்த சீன அரசே ட்விட்டில் நையாண்டியாக விடுத்த ஒரு கூவலுக்காக ஒரு பெண்ணுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை கொடுத்திருப்பது முன்னோக்கி செல்லும் சீன நாட்டுக்கும், சீன மக்களின் எத்ரிகாலத்துக்கும் நல்ல அறிகுறியாகப் படவில்லை,” என்றார்.
4:45 AM
மியூசிக் டி.என்.ஏ (MusicDNA) : புதிய பைல் பார்மட்
பாடலைக் கேட்கும் போதே அதன் வரிகளைப் படிக்க, வீடியோ கிளிப் பார்க்க, இசையை ஒலிக்க, படங்களைக் காட்ட எனப் பல்வேறு பரிமாணங்களுடன் அடுத்த பாடல் பைல் வரப் போகிறது. எம்பி3 பாடல் பைல் பார்மட்டை உருவாக்கியதில் பின்னணியில் இருந்த சில வல்லுநர்களால் இந்த புதிய பார்மட் கிடைக்க இருக்கிறது. இதன் பெயர் மியூசிக் டி.என்.ஏ (MusicDNA).
நார்வே நாட்டைச் சேர்ந்த அப்ளிகேஷன் டெவலப்பர் டாக்பின் பாச் என்பவரால் இந்த புதிய வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இவர் 1993ல் முதல் எம்பி3 பிளேயரை உருவாக்கியவர். பல மியூசிக் நிறுவனங்கள் இந்த புதிய பைல் வடிவமைப்பில் ஆர்வம் காட்டி ஒப்பந்தம் மேற்கொள்ள முன் வந்துள்ளனர்.
ஒரு பாடல் பைலில், பாடல் சார்ந்த தகவல்கள் 32 ஜிபி வரை இணைக்கலாம். ஒரு பைலில் மாற்றம் ஏற்படுத்துகையில், அந்த பைல் எந்த கம்ப்யூட்டரில் இருந்தால், இணைய இணைப்பில் அது அப்டேட் செய்யப்படும். வாடிக்கையாளர்களுக்கு வெறும் இசையை மட்டும் தராமல், இசை சார்ந்த மற்ற தகவல்களையும் தர வேண்டும் என்ற வேட்கையே இந்த புதிய பார்மட் உருவானதற்கு அடிப்படை காரணமாகும்
4:35 AM
புல்லட் ரெயிலை விட வேகமாக ஓடும் அதிநவீன கார்
உலகிலேயே அதிவேகமாக இயங்கும் புல்லட் ரெயில் சீனாவில் செயல்பாட்டில் உள்ளது. இது மணிக்கு 1200 கி.மீ. வேகத்தில் பாய்ந்து செல்கிறது. ஆனால் அதைவிட அதிவேகமாக செல்லக்கூடிய கார் தயாரிக்கப்பட உள்ளது. மணிக்கு சுமார் 1600 கி.மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லத்தக்க இக்காரை இங்கிலாந்து விஞ்ஞானிகள் உருவாக்க உள்ளனர். இக்கார் தயாரிக்கும் பணியில் ரிச்சர்ட் நோபல் என்பவர் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இப்பணி வருகிற ஜனவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.
அதில், அதிசக்தி வாய்ந்த ஜெட் என்ஜின் மற்றும் ராக்கெட் பொருத்தப்படுகிறது. மேலும், இதன் பாகங்கள் மிக மெலிதான உலோக கலவையினால் அமைக்கப்பட உள்ளது. மேலும் 4 அலுமினிய சக்கரங்களும் பொருத்தப்பட உள்ளன. இக்கார் வருகிற 2012-ம் ஆண்டு பயன்பாட்டில் வரும். அப்போது அதிவேகமாக இயங்கி உலக சாதனை படைக்கும் என விஞ்ஞானி ரிச்சர்ட் நோபல் தெரிவித்துள்ளார்.
ரிச்சர்ட் நோபல் ஒரு என்ஜினீயர் ஆவார். இவர் சாதனை படைப்பதில் ஆர்வம் படைத்தவர். கடந்த 1983-ம் ஆண்டு மணிக்கு 1,019 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் டர்போ ஜெட் காரை நிவேதா பாலைவனத்தில் ஓட்டி கடந்து சாதனை படைத்துள்ளார். 1997-ம் ஆண்டு ஆண்டில் கிரீன், மணிக்கு 1228 கி.மீட்டர் வேகத்தில் ஓட்டி சாதனை படைத்த சூப்பர் சோனிக் கார் இவர் தலைமையில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
4:33 AM
வகுப்புக்களுக்குச் செல்லும் போது கலியும் கூடவே உள்ளே சென்றுவிடுகின்றது. பாடம் நடத்தும் பேராசிரியர்களுக்கும் இதனோடு நல்ல நட்பு. அவர்கள் எதுவும் சொல்வதில்லை. பாடம் நடத்திவிட்டு பேராசிரியர் ஷெலிஸ்மித்ஸன் ‘என்ன கலி புரிந்ததா?” என்று சிரித்துக்கொண்டே கழுதையைப்பார்த்தும் கேட்பார்.
இத்தகைய மாணவர்களை இனம் கண்டு அவர்களின் முழுத்திறமையையும் ஊக்குவித்து அவர்களை சமூகத்துடன் இரண்டறக்கலக்கச் செய்வதற்கான விஷேட வேலைத்திட்டங்கள் இங்கு அமுல் செய்யப்பட்டு வருகின்றன.
கலி என்ற இந்தக் கழுதை வகுப்பறைகளுக்குள் பிரவேசிக்கும் போது அது என்ன செய்யுமோ? வகுப்பறைகளைக் குழப்புமோ என்றெல்லாம் ஆசிரியர்களுக்கும் ஏனையவர்களுக்கும் ஆரம்பத்தில் அச்சம் இருந்தது.
ஆனால் கலி இதுவரை அப்படியொன்றும் செய்யவில்லை. மிகவும் நல்லபிள்ளையாக நடந்து கொள்கின்றது.
அதுமட்டுமல்ல கலிக்கு ஒரு புதிய நட்பும் கிடைத்துள்ளது. அதுதான் கண்பார்வையற்ற இன்னொரு மாணவியின் வழிகாட்டியான நாய். இவையிரண்டும் இப்போது நல்ல நண்பர்களாம்.
கல்வி கற்க போகும் கழுதை...!!(Photos Updated)
மொனா ரமோனி பார்வையற்றவர். பிரய்லி உபகரணத்தின் உதவியோடு மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் மனோவியல் சிகிச்சை மற்றும் ஆலோசனை தொடர்பான கற்கை நெறியை மேற்கொண்டு வருகின்றார்.
இவரின் வழிகாட்டித் துணை ஒரு கழுதை. அதன் பெயர் கலி. இதில் என்ன விஷேடம் என்றால் கலி இந்த மாணவிக்கு துணை மட்டுமல்ல உற்ற நண்பனும் கூட.
இவரின் வழிகாட்டித் துணை ஒரு கழுதை. அதன் பெயர் கலி. இதில் என்ன விஷேடம் என்றால் கலி இந்த மாணவிக்கு துணை மட்டுமல்ல உற்ற நண்பனும் கூட.
வகுப்புக்களுக்குச் செல்லும் போது கலியும் கூடவே உள்ளே சென்றுவிடுகின்றது. பாடம் நடத்தும் பேராசிரியர்களுக்கும் இதனோடு நல்ல நட்பு. அவர்கள் எதுவும் சொல்வதில்லை. பாடம் நடத்திவிட்டு பேராசிரியர் ஷெலிஸ்மித்ஸன் ‘என்ன கலி புரிந்ததா?” என்று சிரித்துக்கொண்டே கழுதையைப்பார்த்தும் கேட்பார்.
அமெரிக்காவில் இந்த வகையைச் சார்ந்த மட்டக்குதிரைகள் பார்வையற்றவர்களின் வழிகாட்டி மிருகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் கல்லூரி செல்லும் முதலாவது கழுதை இதுதான். இந்தப் பல்கலைக்கழகத்தில் பார்வைக் கோளாறு உட்பட ஏனைய அங்கவீனமுற்றவர்களுக்காகவும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரு விஷேட பிரிவு உள்ளது.
இத்தகைய மாணவர்களை இனம் கண்டு அவர்களின் முழுத்திறமையையும் ஊக்குவித்து அவர்களை சமூகத்துடன் இரண்டறக்கலக்கச் செய்வதற்கான விஷேட வேலைத்திட்டங்கள் இங்கு அமுல் செய்யப்பட்டு வருகின்றன.
கலி என்ற இந்தக் கழுதை வகுப்பறைகளுக்குள் பிரவேசிக்கும் போது அது என்ன செய்யுமோ? வகுப்பறைகளைக் குழப்புமோ என்றெல்லாம் ஆசிரியர்களுக்கும் ஏனையவர்களுக்கும் ஆரம்பத்தில் அச்சம் இருந்தது.
ஆனால் கலி இதுவரை அப்படியொன்றும் செய்யவில்லை. மிகவும் நல்லபிள்ளையாக நடந்து கொள்கின்றது.
அதுமட்டுமல்ல கலிக்கு ஒரு புதிய நட்பும் கிடைத்துள்ளது. அதுதான் கண்பார்வையற்ற இன்னொரு மாணவியின் வழிகாட்டியான நாய். இவையிரண்டும் இப்போது நல்ல நண்பர்களாம்.
4:21 AM
கரை ஒதுங்கியது ராட்சத திமிங்கலம்
சென்னைத்துறைமுகம் அருகே, ராட்சத திமிங்கலம் ஒன்று அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது. சென்னைத் துறைமுக சிக்னல் பகுதியில், நேற்று ராட்சத திமிங்கலம் ஒன்று மிதந்தது. அழுகிய நிலையில் மிதந்த திமிங்கலத்தை, துறைமுக ஊழியர்கள் சிறு படகுகள் மூலம் கட்டி, கரையோரம் இழுத்து வந்தனர். இரண்டு டன் எடைக்குமேல் இருந்ததால் அவற்றைத் தூக்க முடியவில்லை. இதுகுறித்து மீன்வளத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அமைச்சர் சாமி, துறைமுக தலைவர் அதுல்யமிஸ்ராவும் திமிங்கலத்தை பார்வையிட்டனர். அவற்றை முறையாக அப்புறப்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது. அழுகிய நிலையில் இருப்பதால், அவற்றை இன்று அப்புறப்படுத்தி, கடலோரப் பகுதியில் புதைக்கப்படும் என தெரிகிறது.
4:14 AM
உயிருடன் கரை ஒதுங்கிய டால்பின்களால் பரபரப்பு
கன்னியாகுமரியில் நேற்று பகலில் சுமார் 20க்கும் மேற்பட்ட டால்பின் மீன்கள் கரை ஒதுங்கின. உயிருடன் இருந்த அவை சிறிது நேரத்தில் மீண்டும் கடலுக்குள் சென்று விட்டன.
குமரி சின்னமுட்டம் மீன் பிடி துறைமுகத்தில் படகுகளை பழுது பார்க்கும் யார்டு உள்ளது. நேற்று பகல் 12 மணியளவில் மீனவர்கள் சிலர் அந்த பகுதி யில் நின்று கொண்டிருந்தனர். அப்போது டால்பின் மீன் கள் கரை ஒதுங்கி இருந்ததை அவர்கள் பார்த்தனர். அடுத்தடுத்து சுமார் 20க்கும் மேற்பட்ட டால்பின்கள் கரை ஒதுங்கியது.
இவை அனைத்தும் உயிருடன் இருந்தன. இவை ஒவ்வொன்றும் சுமார் 4 முதல் நான்கரை அடி நீள மும், சுமார் 60 கிலோ எடையும் இருக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர். டால்பின்கள் கரை ஒதுங்கிய தகவல் அறிந்ததும் சிறிது நேரத்தில் ஏராளமானவர்கள் அங்கு திரண்டனர். பின்னர் ஒவ்வொன்றாக கடலுக்குள் சென்றன. ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட டால்பின்கள் கரை ஒதுங்கியது குறித்து மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதுபற்றி மீனவர் ஒருவர் கூறு கையில், டால்பின்கள் இப்போது அடிக்கடி குமரி கடலில் தென்படுகின் றன. ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட டால்பின்கள் கரை ஒதுங்கி இருப்பது இப்போது தான் நிகழ்ந்திருக்கிறது. இதைவிட பெரிய டால்பின்கள்குமரி கடலில் இருக்கலாம் என்றார்
4:09 AM
ஆஸ்திரேலிய பாண்டா கரடிக்கு ஆன்லைனில் பெயர் சூட்டும் விழா நடைபெற்றது. ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகர் சிட்னியில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் பாண்டா கரடி குடும்பம் வசித்து வந்தது. இந்த பாண்டா கரடி குடும்பத்திற்கு புதிய வரவாக குட்டி ஒன்று வந்தது. இதற்கு பெயர் வைப்பதற்கு ஆன்லைனில் போட்டியை நடத்தினர் வனவிலங்கு பூங்கா நிறுவனத்தினர். பூங்கா சார்பில் பூஹூ (ஹேப்பி டைகர்), வெய் ஷியங்( ஜாய் ஆப் வியன்னா), ஆவோ காங்( ஹெல்தி ஆஸ்திரேலியன் பாய்) என்ற மூன்று பெயர்கள் சூட்டப்பட்டன. இந்த ஆன்லைன் போட்டியில் சுமார் 5 ஆயிரம் உயிரியல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். அதில் பூஹூ பெயரை 50.1 சதவீதம் பேரும் 40.8 சதவீதம் பேர் வெய்ஷியாங் பெயரையும், வெறும் 9.1 சதவீதம் பேர் மட்டும் ஆவோ காங் பெயரை தேர்வு செய்திருந்தனர். பூஹூ பெயரை தேர்வு செய்தவர்கள் அனைவரும்2010-ம் ஆண்டு சீனாவுக்கு புலி ஆண்டாக இருப்பதால் அதனையே தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த பாண்டா குட்டியின் பெற்றோர்கள் சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்டவர்களாவர்.
பாண்டா கரடிக்கு ஆன்லைனில் பெயர் சூட்டு விழா
ஆஸ்திரேலிய பாண்டா கரடிக்கு ஆன்லைனில் பெயர் சூட்டும் விழா நடைபெற்றது. ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகர் சிட்னியில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் பாண்டா கரடி குடும்பம் வசித்து வந்தது. இந்த பாண்டா கரடி குடும்பத்திற்கு புதிய வரவாக குட்டி ஒன்று வந்தது. இதற்கு பெயர் வைப்பதற்கு ஆன்லைனில் போட்டியை நடத்தினர் வனவிலங்கு பூங்கா நிறுவனத்தினர். பூங்கா சார்பில் பூஹூ (ஹேப்பி டைகர்), வெய் ஷியங்( ஜாய் ஆப் வியன்னா), ஆவோ காங்( ஹெல்தி ஆஸ்திரேலியன் பாய்) என்ற மூன்று பெயர்கள் சூட்டப்பட்டன. இந்த ஆன்லைன் போட்டியில் சுமார் 5 ஆயிரம் உயிரியல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். அதில் பூஹூ பெயரை 50.1 சதவீதம் பேரும் 40.8 சதவீதம் பேர் வெய்ஷியாங் பெயரையும், வெறும் 9.1 சதவீதம் பேர் மட்டும் ஆவோ காங் பெயரை தேர்வு செய்திருந்தனர். பூஹூ பெயரை தேர்வு செய்தவர்கள் அனைவரும்2010-ம் ஆண்டு சீனாவுக்கு புலி ஆண்டாக இருப்பதால் அதனையே தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த பாண்டா குட்டியின் பெற்றோர்கள் சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்டவர்களாவர்.
4:03 AM

இந்தியா,சீன நாட்டவர்கள் தங்கள் தலைமை சொல்வதையே விரும்புகின்றனர்!!

இந்தியா,சீனா போன்ற நாடுகளில்உள்ள தொழிலாளர்கள் தங்கள் தலைமை சொல்வதை நம்புகிறார்கள் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த நடைபெற்ற ஆய்வில் தெரிவித்திருப்பதாவது: இந்தியா, சீனா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள70 சதவீதத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் நிறுவனத்தின் மேல் அதகாரி கூறுவதை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்கின்றனர். இதன்மூலம் நிறுவனம் குறிப்பிட்ட இலக்கை அடையமுடிகிறது என்று கெனக்சா ஆய்வு மையத்தை சேர்ந்த ஜாக் வெய்லி தெரிவித்துள்ளார். மேலும் இரு நாடுகளிலும் நிறுவனத்ததலைவர்கள் தொழிலாளர்களுடன் நல்லு<றவை வளர்த்து வருவதால் அந்நாடுகளின் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை அடைகிறது என்று தெரிவித்துள்ளார்.
3:58 AM
தேவை இல்லாமல் புலம்புவதில் இங்கிலாந்து நாட்டவர்கள் முன்னிலையில்!!
தேவை இல்லாமல் புலம்புவதில் தேவையில்லாத விசயங்களை மனதில் போட்டு குழம்பிக்கொள்வதில் இங்கிலாந்து நாட்டவர்கள் முன்னிலையில் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக இங்கிலாந்து மக்கள் வருடத்திற்கு 53 மணிநேரம் புலம்புவதில் செலவிடுகின்றனர். குறைந்த வயதுடையவர்கள் தினமும் நான்குமுறை புலம்புவதாக டெய்லி எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. டி.வி.,நிகழ்ச்சிகள் மற்றும் விலை வாசி குறித்து 65 சதவீதம் பேர் வாரத்திற்கு ஒரு நாளாவது புலம்புகின்றனர்.பருவநிலை மாற்றம் குறித்து 64 , அரசின் நிலவரம் குறித்து 50 சதவீதம் பேர் புலம்புகின்றனர். வீட்டு வேலை செய்வதில் 58 சதவீதம் பேர் புலம்புகின்றனர். பண பற்றாக்குறையை காரணம் கூறி 52 சதவீதம் பேர் புலம்புகின்றனர். சிறு விசயங்களை கூட பெரிதாக நினைத்து வருத்தப்படுவது இங்கிலாந்து மக்களுக்கு பழக்கமாக உள்ளது என பர்னெட் என்பவர் தெரிவித்துள்ளார்
3:52 AM
கணவர்களை சந்தேகிக்கும் முஸ்லிம் பெண்கள் கட்டாரில் அதிகமாம்!
முஸ்லிம் நாட்டில் கணவன்மார்களை சந்தேகிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தி பெனின்சுலா பத்திரிகை தெரிவித்துள்ளது.கணவர்களை சந்தேகப்படுவது என்ற கருத்தில் உலக நாடுகள் அனைத்திலும் உள்ள
பெணகள் ஒற்றுமையாக இருப்பார்கள் போலும். கத்தார் நாட்டை சேர்ந்த பெண்கள் தங்கள் கணவர்கள் பயன்படுத்தும் பேனா, சிகரெட் லைட்டர்கள், மற்றும் பரிசுபொருட்கள் போன்றவற்றில் சிறிய வகை கேமராக்களை பொருத்திவைத்து உளவு வேலை பார்க்கின்றனர். அதுமட்டுமில்லாமல் கணவரின் நடவடிக்கைகளை வேவு பார்ப்பதற்காக குறிப்பிட்ட பெண்களையோ அல்லது தனக்கு உண்மையாக விளங்கும் நண்பிகளேயே இத்தகைய வேலைக்கு பயன்படுத்துவாதகவும், இப்படி செய்வதன் மூலம் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதை போன்று உணரமுடிகிறதாக பெண்கள் கூறுவதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
3:45 AM
பாம்பை மூக்கில் நுழைத்து சாகசம்
சீனாவைச் சேர்ந்த ஒருவர் வேடிக்கையான பல சாகசங்களைப் புரிந்ததால் 'மிகுந்த பல்கலைத் திறமையுள்ள கலைஞர்' என்று தனது பெயர் உலகசாதனை புத்தகத்தில் பதியப்படும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார்.
தென்மேற்கு சீனாவின் குயிஸோ மாகாணத்தை சேர்ந்த யாங் குவாங் என்பவர் தன்னால் 30 விசித்திரமான சாகசங்களை நிகழ்த்த முடியும் எனத் தெரிவித்துள்ளார். அதை நிரூபிப்பதற்காக, அவர் ஹீனான் மாகாணத்திலுள்ள தலை நகரில் அனைத்து சாகசங்களையும் ஒரே நிகழ்ச்சியில் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
எரியும் மின்குமிழ்கள் மீதேறி நிற்றல், கண் இமைகளில் கட்டி தண்ணீர் வாளியை தூக்குதல் ,தனது நாசியினுள் இலத்திரனியல் துளைக்கருவியை செலுத்துதல், கூர்மையான கத்தியின் முனை மீது நிற்றல், காரை தனது கண் இமையால் இழுத்தல் போன்ற சாகசங்களை அவர் புரிந்தார்.
அத்துடன், அவர் உயிருடன் உள்ள பாம்புக் குட்டியோன்றை தனது நாசித் துவாரத்தால் உள்ளே அனுப்பி தனது வாயிலிருந்து அந்தப் பாம்புக் குட்டியை இழுத்து, பார்வையாளர்களை அதிர்ச்சியடையச் செய்தார்.
அவரை போலவே வேறு சிலரும் இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காக அவரின் காதலி வெங் மெய் (வயது 22 ) தனது கழுத்தில் அழுத்திப் பொருத்தப்பட்ட கத்தியோன்றின் மூலம் காரொன்றை இழுத்தமை குறிப்பிடத்தக்கது
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
தமிழ் உணர்வாளர்களது எதிர்பினையும் மீறி அண்மையில் இலங்கைக்கு படப்பிடிப்பிற்காக சென்று ராசபக்ச அரசின் விருந்தாளியாக தங்கியிருந்து சமுக சேவைய...
-
தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகே மாதவன் நகரைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவருக்கு 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இதில் அவரது 2வது மகள் சுடல...
-
கடல் கண்ணிகள் பற்றி அனைவரும் பழைய புத்தக கதைகளிலே படித்திருப்பீர்கள் அல்லது கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இதுவரை கடல் கண்ணிகள் உருவத்தை ...
-
ஜெயம் படம் மூலம் தமிழில் அறிமுகமான சதா, தற்போது புலி வேஷம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். எதிரி படத்தில் மாதவனுடன் சதா ஜோடியாக நட...
-
சிறிலங்கா இராணுவம் போர்க்காலத்தில் புரிந்த குற்றங்கள் தொடர்பாக மேலும் பல ஆதாரங்கள் தம்மிடடம் உள்ளதாக மனித உரிமைக் காப்பகம் தெரிவித்துள்ள நி...






























